மீண்டும் உலவும் மஹிந்தவின் சதொச 'வாகன' படங்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 March 2020

மீண்டும் உலவும் மஹிந்தவின் சதொச 'வாகன' படங்கள்


2014ம் ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்சவின் உருவப்படத்தோடு காணப்பட்ட சதொச வாகனங்களின் படங்கள் இன்று மீண்டும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.இந்நிலையில், கொரொனா சூழ்நிலையை மஹிந்த தரப்பு தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாக விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.

குறித்த படங்களை முதலில் பரப்பிய தரப்பு எது? என்பது குறித்து சந்தேகம் நிலவுகின்ற அதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதனைப் பகிர்ந்து கொண்டதையடுத்து சமூக வலைத்தள பாவனையாளர்களின் கனம் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment