சஜித்தை திருப்திப் படுத்தும் வகையில் புதிய செயலாளர்: ராஜித - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 March 2020

சஜித்தை திருப்திப் படுத்தும் வகையில் புதிய செயலாளர்: ராஜித


ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசவாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒருவரே புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் சஜித் - ரணில் அணிகளுக்கிடையில் தேர்தலை முன்னிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மட்டத்தில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment