கல்முனை: ஊரடங்கு தளர்த்தப்பட்டும் இயல்பு வாழ்க்கை மந்த கதி - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

கல்முனை: ஊரடங்கு தளர்த்தப்பட்டும் இயல்பு வாழ்க்கை மந்த கதி



அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரவுக்குட்பட்ட கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதும் இன்றைய தினம் (30.03.2020) பொதுச் சந்தைகள் வியாபார நிலையங்கள் திறக்கப்படவில்லை.

கல்முனை மாநகர சபை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய வர்தக சங்கங்கள் வியாபார நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இதேவேளை அனுமதிபெற்ற அத்தியவசிய மரக்கறி விற்பனை நிலையங்களில் மக்கள் பாதுகாப்பாக இடைவெளிவிட்டு வரிசையாக நின்று பொருட்கள் கொள்வனவு செய்தனர்.

வங்கிகளில் நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்து நின்று சேவைகளை பெற்றுச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

நகருக்கு வரும் பிரதான வீதிகளில் ஒரு வழிப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டு; பொலிஸாரால் விசேட வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டனர்.

இதனால் இன்று (30.03.2020) கல்முனை நகரில் அதிக நெரிசலுடன் பொது மக்கள் ஒன்று கூடுவது கட்டுத்தப்பட்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

-ஏ.எல்.எம்.ஷினாஸ்

No comments:

Post a Comment