ஜனாஸா எதிர்காலம்: உயர் மட்ட முயற்சிகள் தொடர்கிறது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 March 2020

ஜனாஸா எதிர்காலம்: உயர் மட்ட முயற்சிகள் தொடர்கிறது!நேற்றைய தினம் நீர்கொழும்பில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம் சகோதரரின் உடலம் முன்னைய இணக்கப்பாட்டை மீறி எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எதிர்காலத்தில் இதனைத் தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்கிறது.இது தொடர்பில் இன்றைய தினம் இராணுவ தளபதியை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் சந்தித்துப் பேசியிருந்த நிலையில் உடனடியான தீர்வொன்று எட்டப்படவில்லையென அறியமுடிகிறது.

எனினும், குறித்த விவகாரத்தினை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லதாக இராணுவ தளபதி வாக்குறுதியளித்துள்ள நிலையில் நாளை காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் அவ்வேளையில் இது குறித்து பேசப்படவுள்ளதாகவும் சோனகர்.கொம் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாளை காலையில் உயர் மட்டத்திலிருந்து சாதகமான அறிவுறுத்தல் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment