மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் பூட்டு - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 March 2020

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் பூட்டுகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்காக அரசின் அறிவுறுத்தலுக்கு அமைய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகைகளை நடத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.இதன் பிரகாரம் ஓட்டமாவடி – மீராவோடை மீரா மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்குள் எவரும் உட்செல்ல முடியாதவாறு மூடப்பட்டுள்ளது என்று பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.அலியார் தெரிவித்தார்.

நாட்டின் சட்டதிட்டத்தை மதித்து எக் காரணத்திற்காகவும் பள்ளிவாசலுக்குள் எவரும் உள்ளே நுழையாமல் எமது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மூடி வைத்துள்ளாதாக தலைவர் ஏ.எல்.அலியார் மேலும் தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a comment