மஹிந்த குருநாகலில் போட்டி: நாமல் - sonakar.com

Post Top Ad

Monday, 2 March 2020

மஹிந்த குருநாகலில் போட்டி: நாமல்


பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச.


பெரும்பான்மைப் பலம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்கும் நிமித்தம் ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைப்பதாகவும் தற்போதுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சிப் பூசலூடாக பெரமுன பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மஹிந்த ராஜபக்ச தமக்குத் தேவையான தொகுதியைத் தேர்ந்தெடுப்பார் எனவும் பெரும்பாலும் அது குருநாகல் மாவட்டமே எனவும் அவர் தெரவிக்கிறார்.

No comments:

Post a Comment