சுதந்திரக் கட்சியின் 17 லட்சம் வாக்குகளை காப்பாற்ற முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 March 2020

சுதந்திரக் கட்சியின் 17 லட்சம் வாக்குகளை காப்பாற்ற முஸ்தீபு


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 17 லட்சம் வாக்குகளைக் காப்பாற்றி அதனூடாக 25 ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அக்கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.பெரமுனவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பெரமுன உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியினரை மாற்றான் மனப்பான்மையோடு விமர்சித்து வருவதால் வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சு.க வேட்பாளர்களை தோற்கடிக்க உள்வீட்டுச் சதி இடம்பெறலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சு.க தனித்துப் போட்டியிட்டு ஆசனங்களைப் பெற்று அதனூடாக கட்சியின் இருப்பையும் பெறுமதியையும் காப்பாற்றப் போவதாகவும் இது குறித்து நாளைய தினம் இடம்பெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் முடிவெடுக்கவுள்ளதாகவும் அக்கட்சி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment