வைத்தியசாலையில் அனுமதி பெற்றார் உதயங்க! - sonakar.com

Post Top Ad

Saturday, 15 February 2020

வைத்தியசாலையில் அனுமதி பெற்றார் உதயங்க!


மைத்ரி - ரணில் அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வெளிநாடுகளில் சுற்றித்திரிந்ததோடு மஹிந்த ராஜபக்சவை மாத்திரம் அவர் செல்லும் நாடுகளில் சந்தித்து வந்த முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க, திடீரென நாடு திரும்பிய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியிடப்பட்டிருந்தது.



இந்நிலையில், அவர் முக்கிய நபர்கள் கைதானதும் தொடரும் வழமையினடிப்படையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை 7 மணியளவில் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த அவர் 10.30 மணிக்கெல்லாம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment