'இதய' சின்னத்தில் கூட்டணியமைக்கும் சஜித்! - sonakar.com

Post Top Ad

Monday, 10 February 2020

'இதய' சின்னத்தில் கூட்டணியமைக்கும் சஜித்!


பொதுத் தேர்தலை முன்னிட்டு சஜித் பிரேமதாச அமைக்கவுள்ள கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுன என பெயரிட்டு இதய சின்னத்தை தேர்ந்தெடுக்கப் போவதாக சஜித் பிரேமதாச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ள அதேவெளை கூட்டணிக் கட்சிகளுடனான விவகாரங்களை சஜித் பிரேமதாசவே பிரத்யேகமாக கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழு தலைவரை சந்தித்த சஜித், கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து இவ்வாறு அபிப்பிராயம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment