வவுணதீவு: பொலிஸ் சார்ஜன்ட் கொலை; இருவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 6 February 2020

வவுணதீவு: பொலிஸ் சார்ஜன்ட் கொலை; இருவர் கைதுவவுணதீவு பகுதியில் இன்று காலை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.மூன்று பிள்ளைகளின் தந்தையான 50 வயது பொலிஸ் அதிகாரியின் காணியில் அத்துமீறி நுழைந்து மது அருந்த முயற்சித்த நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதமே கொலை வரை சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உடலில் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டிருந்தமையும் குறித்த அதிகாரி வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment