கொரோனா பற்றி முதலில் எச்சரித்த மருத்துவர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Friday, 7 February 2020

கொரோனா பற்றி முதலில் எச்சரித்த மருத்துவர் மரணம்!


கொரோனா வைரஸ் பற்றி கடந்த டிசம்பர் மாதமே சக வைத்தியர்களுக்கு தகவல் வழங்கி விழிப்புணர்வூட்டிய சீன மருத்துவர் லீ வென்லியங் மரணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வைரஸ் பரவிய வுஹான் பிரதேசத்தில் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குறித்த மருத்துவர் அதே வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஆரம்ப கட்டத்தில் அவர் பொய்யான வதந்தி பரப்புவதாக சீன பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இவ்வைரசின் தாக்கத்தின் அளவை சீன அரசு குறைத்து வெளியிடுவதுடன் உண்மைகளை மூடி மறைப்பதாக உலக அளவில் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment