தனிச் சிங்கள அரசுக்கான இறுதி வாய்ப்பு: ஞானசார எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday, 13 February 2020

தனிச் சிங்கள அரசுக்கான இறுதி வாய்ப்பு: ஞானசார எச்சரிக்கை


ஜனாதிபதி தேர்தலில் அனைத்து சிங்கள மக்களும் ஒன்றிணைந்து சிங்கள தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்தது போன்று தனிச் சிங்கள அரசொன்றை அமைத்து தலை நிமிர்ந்து நிற்பதற்கான இறுதி வாய்ப்பு எதிர்வரும் பொதுத் தேர்தல் என தெரிவிக்கிறார் ஞானசார.


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச சிறப்பான முறையில் நாட்டைக் கட்டியெழுப்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர், சிங்கள பற்றுக் கொண்ட ஒருவரை நாட்டின் தலைவராக்க வேண்டும் என்ற நீண்ட நாள் காத்திருப்பு நிறைவேறியது போன்று தனிச்சிங்கள அரசொன்றை அமைப்பதற்கான வாய்ப்பையும் சிங்கள மக்கள் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

இதேவேளை, 50:50 கேட்டுக்கொண்டிருந்தால் ஒன்றும் கிடைக்காது என்பதை முஸ்லிம் - தமிழ் தலைவர்கள் உணர வேண்டும் எனவும் ஞானசார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment