ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் மாதிரி பரிசோதனை - sonakar.com

Post Top Ad

Friday, 7 February 2020

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் மாதிரி பரிசோதனை


ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் மாதிரி இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளது.ரஞ்சனின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் உரையாடி அரசியலில் சலசலப்பை உருவாக்கியிருந்த அதேவேளை, தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான ஒலிப்பதிவுகள் இருப்பதாக ரஞ்சன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

பொலிசார் கைப்பற்றியதாகக் கூறிய ஒலிப்பதிவுகளை பெரமுன உறுப்பினர்கள் மற்றும் சார்பு அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்ததன் பின்னணியில் சர்ச்சை உருவாகியிருந்தது. இந்நிலையில் இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் அவரது குரல் மாதிரி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment