சமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 20 February 2020

சமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது


அமைச்சர் சமல் ராஜபக்சவை கத்தியால் குத்திக் கொல்லப் போவதாக குறுந்தகவல் அனுப்பி மிரட்டிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.ராஜகிரியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்ததாகவும் இது போன்று மேலும் பலருக்கும் மிரட்டல் விடுத்து வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment