இலஞ்சம் பெற்று தீர்ப்பை மாற்றிய நீதிபதிக்கு 16 வருட சிறை! - sonakar.com

Post Top Ad

Thursday, 20 February 2020

இலஞ்சம் பெற்று தீர்ப்பை மாற்றிய நீதிபதிக்கு 16 வருட சிறை!தொழிலதிபர் ஒருவருக்கு சார்பாக காணி வழக்கொன்றின் தீர்ப்பை வழங்குவதற்கு 2013ம் ஆண்டு மூன்று லட்ச ரூபா இலஞ்சம் பெற்ற நீதிபதி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் ஊழியருக்கும் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஹோமாகம முன்னாள் மாவட்ட நீதிபதி சுனில் விக்ரம அபேசிங்கவுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளதுடன் இலஞ்சமாகப் பெற்ற தொகையை திருப்பிக் கொடுக்கவும் மேலதிகமாக தலா 20,000 ரூபா அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment