செயற்குழுக் கூட்டத்தை பகிஷ்கரிக்கும் சஜித் அணி: UNPக்குள் குழப்பம் - sonakar.com

Post Top Ad

Thursday, 30 January 2020

செயற்குழுக் கூட்டத்தை பகிஷ்கரிக்கும் சஜித் அணி: UNPக்குள் குழப்பம்


தலைமைப் பதவி இழுபறி தொடரும் நிலையில் இன்று மாலை கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை சஜித் அணி பகிஷ்கரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


சஜித், ஹரின் உட்பட 35 உறுப்பினர்கள் இவ்வாறு ஓரணியில் திரண்டிருப்பதோடு எதிர்கால நடவடிக்கை பற்றி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த தடவை கூடிய செயற்குழு தீர்மானம் எதுவுமின்றி நிறைவு பெற்றிருந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு கூட்டம் இடம்பெறவிருந்ததோடு ரோசி சேனாநாயக்க, சரத் பொன்சேகா, அஜித் பெரேரா மற்றும் இம்தியாஸ் போன்றோருக்கு புதிய செயற்குழுவில் இடமளிக்கப்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment