விஜேதாசவின் சட்டத் திருத்தங்கள் ஜனநாயக விரோதம்: JVP - sonakar.com

Post Top Ad

Thursday 2 January 2020

விஜேதாசவின் சட்டத் திருத்தங்கள் ஜனநாயக விரோதம்: JVP



தனி நபர் பிரேரணையூடாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாசவினால் முன் வைக்கப்பட்ட 21ம் மற்றும் 22ம் சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றினால் சுற்றறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவை ஜனநாயக விரோதமானவை என தெரிவிக்கிறது ஜே.வி.பி.



அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் தவறுகளை திருத்தும் நோக்கில் தாம் இத்திருத்தச் சட்டங்களை முன் வைப்பதாக விஜேதாச விளக்கமளித்துள்ளார். இதனடிப்படையில் 19ம் திருத்தச் சட்டத்தின் சில அம்சங்களை மாற்றக் கோரி 21ம் திருத்தச் சட்டத்தையும் ஜனாதிபதியின் சர்வாதிகாரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் 22ம் திருத்தச் சட்டத்தையும் அவர் முன் வைத்துள்ளார்.

எனினும், ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பில் இது மிகவும் மோசமான செயல் எனவும் அதனை தாம் அங்கீகரிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற ஜே.வி.பி, புதிய திருத்தச் சட்டம் ஊடாக சிறுபான்மை சமூக கட்சிகள் மற்றும் சிறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கக் கங்கணம் கட்டப்படுவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment