முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான விசாரணையில் வாக்குமூலம் பெற்றுள்ளனர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குறித்த சம்பவம் மீளவும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ரணிலிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஆகியோர் சந்தேகநபர்களாக்கப்பட்டுள்ளதுடன் அக்காலத்தில் மைத்ரி - ரணிலிடையே நிலவிய கருத்து மோதல்களால் தேசிய பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சாட்சிகள் ஊடாக தெளிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment