ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவ இழுபறி நிலவி வருகின்ற நிலையில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் அணியினர் பிரத்யேக கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பின்னணியில், நாடாளுமன்ற கட்டிடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கிய பங்காளிக் கட்சிகள் ஒன்று கூடி சஜித் தலைமையில் புதிய கூட்டணியாக இயங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ரஞ்சித் மத்தும பண்டார.
மனோ கணேசன், திகாம்பரம் உட்பட்டோர் இதனை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை ஏனைய ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளின் அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment