கி.மாகாண ஆளுனர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜயம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 January 2020

கி.மாகாண ஆளுனர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜயம்மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.இதன்போது வருகை தந்த ஆளுனர் அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், மகப்பேற்று விடுதிகளை பார்வையிட்டதுடன், விடுதி வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரங்க ராஜபக்ஷ தலைமையில் விசேட ஒன்றுகூடல் வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தில் இம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் தவிசாளர் எஸ்.ஹரிபிரதாப், ஆளுனரின் செயலக உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதில் வைத்தியசாலையில் நிலவும் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை, மழை நீர் வடிந்தோடுவதற்கான வடிகாலமைப்பு திட்டம், கழிவு நீர் அகற்றும் திட்டங்கள் என்பவற்றை அவசரமாக நிறைவேற்றித் தருமாறு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரங்க ராஜபக்ஷவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அத்தோடு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஐந்து வைத்திய நிபுணர்கள் மாத்திரமே உள்ளது. குறித்த வைத்தியசாலையானது ஏ தரத்தினை கொண்டுள்ள ஆதார வைத்தியசாலையாகும்;.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிலவும் ஆளனி பற்றாக்குறையினை மிகவிரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும், மேலதிக தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அத்தோடு எனது புகைப்படம் பொறிக்கப்பட்டு பதாதைகளை விளம்பரப்படுத்தி பொலித்தீன் பாவனையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கான குறித்த விஜயமானது கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பானளர்  எம்.பி.முஸம்மிலின் வேண்டுகோளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment