பாவனைக்குப் பொருத்தமற்ற இ.போ.ச. பஸ்களை அகற்ற நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 12 January 2020

பாவனைக்குப் பொருத்தமற்ற இ.போ.ச. பஸ்களை அகற்ற நடவடிக்கை

OuXjSbD

போக்குவரத்துச் சேவைகளுக்குப் பொருத்தமற்ற அனைத்து பயணிகள் பஸ் வண்டிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, மலை நாட்டுப் பகுதியில் பயணிக்கும் பழைய பஸ் வண்டிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச.  தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ் வண்டிகளும், கடந்த வாரம் முதல் பழுது பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும், நல்ல நிலையிலுள்ள பஸ் வண்டிகள் திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பசறை, மடுல்சீமை பிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் வண்டியொன்று வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் காயமடைந்த சம்பவத்திற்கு இதுவும் ஒரு காரணமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு முற்பட்ட 1,000 பஸ் வண்டிகள் இயங்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment