கல்முனை: இ'னேசியாவில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 January 2020

கல்முனை: இ'னேசியாவில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழாஇந்தோனேஷியா ஜாவா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக்கொடுத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி இனாம் மௌலானா பாத்திமா ஷைரீனை பாராட்டி கெளரவிக்கும் மகிழ்ச்சிப் பெருவிழா திங்கட்கிழமை கல்லூரி சமூகத்தின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.கல்லூரி முதல்வர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் முன்னாள் முதல்வர் 'அதிபர் மணி' அல்ஹாஜ் ஏ.எச்.ஏ.பஷீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதில் டொக்டர் ஏ.உதுமாலெப்பை உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சாதனை மாணவி பாத்திமா ஷைரீனுக்கு கல்லூரி சமாக்கத்தினரால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் அதிதிகள், அதிபர், பிரதி அதிபர்கள் உட்பட தரம் 06 தொடக்கம் தரம் 13 வரையான பகுதித் தலைவர்கள் ஊடாக பொற்கிழிகளும் பரிசுப் பொதிகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கபட்டன.

அத்துடன் 'அதிபர் மணி' ஏ.எச்.ஏ.பஷீர் பிரதான வாழ்த்துச் சொற்பொழிவை நிகழ்த்தியதுடன் சாதனை மாணவியை விசேட விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கவி வாழ்த்துகளும் இடம்பெற்றன.

-செயிட் ஆஷிப்

No comments:

Post a Comment