ஆட்சி மாற்றத்தோடு ஊடக சுதந்திரம் பறிபோய் விட்டது: இரான் - sonakar.com

Post Top Ad

Thursday 23 January 2020

ஆட்சி மாற்றத்தோடு ஊடக சுதந்திரம் பறிபோய் விட்டது: இரான்


2013 - 2014 காலப்பகுதியில் 180 நாடுகளில் ஊடக சுதந்திர நிரல்படுத்தலில் 160வது இடத்தை வகித்திருந்த இலங்கை நல்லாட்சி காலப்பகுதியில் பாரியளவு முன்னேறியிருந்ததாகவும் தற்போது மீண்டும் அதாள பாதாளத்துக்கு வீழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் இரான் விக்ரமரத்ன.



தமது கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்த போது ஒரு ஊடகவியலாளரேனும் தாக்கப் படவோ, கடத்தப்படவோ, கொலை செய்யப்படவோ இல்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், தற்போது ஆட்சி மாற்றத்தோடு பலர் மௌனித்துப் போயுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்தையும் ஊடகங்களோடு பிணைந்திருப்பது மேலும் அச்சத்தை உருவாக்கும் செயல் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment