நீதித்துறையில் மஹிந்தவின் தலையீடு: நாடாளுமன்றில் ரஞ்சன்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 January 2020

நீதித்துறையில் மஹிந்தவின் தலையீடு: நாடாளுமன்றில் ரஞ்சன்!


ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறி வந்த நிலையில் தான் தன்னால் முடிந்ததை செய்வதற்காகவே ஒலி,ஒளிப் பதிவுகளுடன் ஆதாரங்களைத் திரட்டி வைத்திருந்ததாகவும் தனக்கு யாருடனும் தனிப்பட்ட கோபமோ தேவையோ இல்லையெனவும் தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.



விளக்கமறியலில் இருக்கும் ரஞ்சன், இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன் மத்திய வங்கி ஊழல் பின்னணியை வெளிக் கொண்டுவருவதிலும் தான் பங்களித்ததாகவும் தனது ஒலிப்பதிவுகள் யாவும் பின்நாளில் ஆதாரம் தேவைப்படும் என்ற காரணத்தினாலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், போதைப் பொருள் வியாபாரியும் கொலையாளியுமான துமிந்த சில்வாவை விடுவிக்க அவரது போதைப் பொருள் பணத்தில் இயங்கி வரும் ஹிரு தொலைக்காட்சி தமக்குத் தேவையான ஒலிப்பதிவுகளை வெளியிட்டு குழப்பங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்த அவர், இன்று மேலும் பல தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நீதித்துறையில் தலையிட்டதற்கான ஆதாரங்கள் உட்பட பல ஒலி,ஒளிப்பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்த அவர், நாடாளுமன்றில் இருக்கும் குற்றவாளிகளிடம் தனக்கு நற்சான்றிதழ் அவசியமில்லையெனவும் தெரிவித்ததோடு சபையில் போதைப் பொருள் வர்த்தகர்கள், எத்தனோல் வர்த்தகர்கள், மண் வியாபாரிகள், சாராய வியாபாரிகளே நிறைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்ததோடு கோட்டாபே ராஜபக்சவுடனான எந்த ஒரு பதிவும் இல்லையெனவும் தெரிவித்திருந்ததோடு தனது செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தமை மை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment