ஜெனரல் சுலைமானி கொலை; பழி வாங்கப் போவதாக ஈரான் சூளுரை - sonakar.com

Post Top Ad

Friday, 3 January 2020

ஜெனரல் சுலைமானி கொலை; பழி வாங்கப் போவதாக ஈரான் சூளுரை


ஈரானின் குத்ஸ் படைப்பிரிவு பிரதானியும் முக்கிய இராணுவ தளபதியுமான காசிம் சுலைமானி இன்று அமெரிக்காவின் நேரடி தாக்குதலில் உயிரிழந்துள்ள நிலையில் தகுந்த பதிலடியுடன் பழி வாங்கப் போவதாக ஈரான் சூளுரைத்துள்ளது.டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவிலேயே சுலைமானி கொல்லப்பட்டுள்ள அதேவேளை குறித்த நபரே மத்திய கிழக்கில் ஈரான் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சுலைமானியையும் அவரரை படையையும் பயங்கரவாதிகள் என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்து வருகின்ற அதேவேளை, கடந்த வாரம் பக்தாதில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஈரானே காரணம் எனவும் அதற்கான பதிலடி காத்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment