விமான விபத்து: படையினர் நால்வர் மரணம் - sonakar.com

Post Top Ad

Friday, 3 January 2020

விமான விபத்து: படையினர் நால்வர் மரணம்


இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Y-12 வகை விமானம் ஒன்று ஹப்புத்தல பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானதில் நான்கு விமானப் படையினர் உயிரிழந்துள்ளனர்.வீரவிலயிருந்து வழமையான ஆகாய வழி கண்காணிப்பு நடவடிக்கைக்காகக் கிளம்பிச் சென்ற விமானவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதில் பயணித்த நால்வரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து விமானப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a comment