மலேசியாவிலிருந்து வந்த இரு பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 26 January 2020

மலேசியாவிலிருந்து வந்த இரு பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு


மலேசியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்லும் விமானத்தில் பயணித்த இருவர் கொரனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்டறியப்பட்டுள்ளது.


இலங்கையூடாக பயணிக்கும் விமானத்தில் பயணிந்த இந்தோனேசிய பெண் ஒருவர் மற்றும் பாகிஸ்தானிய பிரஜையொருவரே இவ்வாறு அதிக உடல் வெப்ப நிலை, நடுக்கம் போன்ற காரணிகளுடன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் பாரிய சமூகப் பிரச்சினையாக வெடித்துள்ள குறித்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடுகளையும் சென்றடைந்துள்ளதாக கணிப்புகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment