மத்திய வங்கி பிணை முறி ஊழல் விசாரணைக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு வகையில் இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அவரது கூற்றுப்படி, விசாரணையின் நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஆராய்ந்த பொலிஸ் அதிகாரிகளை ரணில் வேறு வகையில் விசாரணைகளுக்குட்படுத்தியதாகவும் பல தடைகளையும் உருவாக்கியதாகவும் தெரிவிக்கிறார்.
எனினும், தான் தொடர்ந்தும் ஆவணப்படுத்தும் பணியைச் செய்ததோடு சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ வேண்டுகோளையும் அனுப்பியதாக மைத்ரி மேலும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment