ஷாபியை வேலையில் சேர்க்க விட மாட்டோம்: ரதன தேரர் - sonakar.com

Post Top Ad

Sunday 12 January 2020

ஷாபியை வேலையில் சேர்க்க விட மாட்டோம்: ரதன தேரர்


குருநாகல் மருத்துவர் ஷாபி, மீளவும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ள அத்துராலியே ரதன தேரர், பாரிய குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அவருக்கு அத்தனை எளிதாக வேலையில் சேர முடியாது என விளக்கமளித்துள்ளார்.


குறித்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் பிரத்யேக குழு ஊடாக பொது சேவை ஆணைக்குழு விசாரணை நடாத்தி வருவதாகவும் இந்நிலையில் அவரைப் பணியில் சேர்க்க முடியாது எனவும் தான் இது தொடர்பில் தாம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நபருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கும்படி தான் ஜனாதிபதியை வேண்டிக் கொண்டுள்ளதாகவும் ரதன தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Suhood MIY said...

Comments கெடுக்கலாமுங்க. பிரச்சினை வரும். பார்க்க வேண்டியவன் பார்ப்பான். பார்க்கட்டும்.

Post a Comment