19 திருத்தங்கள் கண்ட யாப்பை மாற்றியாக வேண்டும்: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Friday 3 January 2020

19 திருத்தங்கள் கண்ட யாப்பை மாற்றியாக வேண்டும்: ஜனாதிபதி


1978 முதல் 19 தடவைகள் திருத்தங்களைக் கண்டுள்ள அரசியல் யாப்பில் கட்டாய மாற்றங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.



இதுவரை கால திருத்தச் சட்டங்களாலேயே பல்வேறு அரசியல் குழப்பங்கள் நாட்டில் நிலவி வருவதாக தெரிவிக்கின்ற அவர், இந்நிலையை மாற்றும் வகையில் அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவிக்கிறார்.

கடந்த ஆட்சியில் புதிய அரசியல் யாப்பொன்றைக் கொண்டு வர முயன்ற போதிலும் மஹிந்த தரப்பு அதனை எதிர்த்து வந்திருந்தது. எனினும், 19ம் திருத்தச் சட்டம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தியதோடு சுயாதீன ஆணைக்குழுக்களையும் உருவாக்க வழி சமைத்திருந்தது. எனினும், தற்போது கோட்டாபே ராஜபக்சவின் வெற்றியை முதலீடாகக் கொண்டு அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் மீண்டும் சர்வ அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் குவிக்கப்பட வேண்டும் என தெரிவித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி இன்று தன்னுடைய கன்னி நாடாளுமன்ற  உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment