
டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் பிரதேசத்திலிருந்து பரவியதாகக் கருதப்படும் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் இதற்கு முந்தைய வைரஸ் தாக்குதல்களை மிஞ்சி வளர்ந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2003ம் ஆண்டு 20க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியிருந்த சார்ஸ் வைரசினால் 8000 பேரளிவிலேயே பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது கொரோனாவினால் 10,000க்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய அளவில் 213 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலக சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment