இலங்கையை 'பிரிக்கும்' எண்ணமில்லை: UK கன்சர்வடிவ் கட்சி - sonakar.com

Post Top Ad

Wednesday 4 December 2019

இலங்கையை 'பிரிக்கும்' எண்ணமில்லை: UK கன்சர்வடிவ் கட்சி



டிசம்பர் 12ம் திகதி ஐக்கிய இராச்சியத்தில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் லேபர் மற்றும் கன்சர்வடிவ் ஆகிய இரு பிரதான கட்சிகளும் இலங்கை விவகாரம் தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளன.



லேபர் கட்சி, இலங்கையில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கப் பாடுபடப் போவதாக தெரிவித்துள்ள அதேவேளை, கன்சர்வடிவ் கட்சியின் விஞ்ஞாபனத்தில் மத்திய கிழக்கு (இஸ்ரேல் - பலஸ்தீனம்) சைப்ரஸ் மற்றும் இலங்கையில் இரு நாடுகளுக்கான தீர்வையும் நல்லிணக்கத்தையும் ஆதரிக்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இரு நாடுகள் என்ற விடயம் இஸ்ரேல் - பலஸ்தீனத்தை மாத்திரமே குறிப்பதாகவும் நல்லிணக்க விவகாரத்தில் மாத்திரமே இலங்கை பற்றி அக்கறை செலுத்தப்படவுள்ளதாகவும் அக்கட்சி பின்னர் விளக்கமளித்துள்ளது. எனினும், முதலில் வெளியான தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இரு தேசங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குழப்ப நிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment