சுதந்திரக் கட்சி தலைமையில் அரசாங்கம்: SLFP கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 1 December 2019

சுதந்திரக் கட்சி தலைமையில் அரசாங்கம்: SLFP கோரிக்கை


ஜனநாயகம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வலுவூட்டக் கூடிய சக்திகள் மைத்ரிபால சிறிசேனவுடன் கை கோர்ப்பது தவிர்க்க முடியாதது என தெரிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், தமது கட்சி தலைமையில் உறுதியான அரசொன்றை அமைக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.ஜனாதிபதியாக இருந்த மைத்ரிபால சிறிசேன, தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் என சு.க தரப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், பெரமுனவுடனான ஒப்பந்தத்துடன் ஆட்சியில் பங்கெடுத்துள்ள சு.க, எதிர்வரும் தேர்தல் ஊடாக அரசமைக்கும் என அக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இப்பின்னணியில் தேசிய அளவில் ஜனநாயக சக்திகளைத் தம்மோடு இணைத்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment