ஈஸ்டர்: ரிசாத் பதியுதீனிடம் CID விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday, 30 December 2019

ஈஸ்டர்: ரிசாத் பதியுதீனிடம் CID விசாரணை


ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை புதிதாக விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரவினர் இன்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம்  மூன்று மணி நேர விசாரணை நடாத்தியுள்ளனர்.குறித்த சம்பவத்தோடு ரிசாத் பதியுதீனுக்குத் தொடர்பிருப்பதாக தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் இவ்விசாரணை இடம்பெற்றுள்ளதுடன் ரவுப் ஹக்கீமிடமும் விசாரணை நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் விசாரணைப் பட்டியலில் உள்ளதுடன் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணியில் தலையிட்டதாக ஒரே நபர் நான்கு தடவைகளுக்கு மேல் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment