சம்பிக்கவின் சகாக்களையும் கைது செய்ய வேண்டும்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 December 2019

சம்பிக்கவின் சகாக்களையும் கைது செய்ய வேண்டும்: கம்மன்பில


சம்பிக்க கைது செய்யப்பட்டது போன்றே அவரது நெருங்கிய சகாக்கள் சிலரும் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் சம்பிக்கவின் நெருங்கிய தோழர் உதய கம்மன்பில.


வாகன விபத்து தொடர்பில் நான்கு வருடங்களுக்குப் பின்னர் சாட்சிகளை மிரட்டும் வகையில் குறித்த நபர்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விபத்தில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சட்டரீதியானது எனவும் கம்மன்பில தெரிவிக்கிறார்.

எனினும், சம்பிக்கவுக்கு எதிராக சாட்சி கூறச் சென்றால் அவர்களுக்கும் வழக்குகள் தொடரப்படும் எனும் வகையில் எச்சரிக்கவே குறித்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாகவும் கம்மன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment