மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரி நேற்றைய தினம் கொலன்னாவையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின் துமிந்த சில்வாவுக்கு 'பொது மன்னிப்பு' கிடைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் கொலன்னாவைக்குச் சென்றிருந்த சஜித் பிரேமதாசவை எதிர்த்து அங்கு கூச்சலிட்டவர்கள் தமது தொகுதிக்கு துமிந்தவே மீண்டும் வர வேண்டும் என கோசமிட்டிருந்தனர்.
துமிந்த விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் அவரது சகோதரரின் ஹிரு தொலைக்காட்சி ராஜபக்ச சகோதரர்களை தொடர்ச்சியாக ஆதரித்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment