கதிரைச் சின்னத்தை விட மொட்டு பிரபலமானது: யாப்பா - sonakar.com

Post Top Ad

Sunday 15 December 2019

கதிரைச் சின்னத்தை விட மொட்டு பிரபலமானது: யாப்பா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருப்போரும் பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட்டாலும் கதிரைச்  சின்னமே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டும் என அண்மையில் கட்சியின் செயலாளர் தயாசிறி கருத்து வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் சின்னம் முக்கியமில்லை, ஒற்றுமையே அவசியம் என தெரிவிக்கின்ற லக்ஷமன் யாப்பா, கதிரைச் சின்னத்தை விட தற்காலத்தில் மொட்டுச் சின்னமே பிரபல்யம் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை பெரமுனவில் இணைந்திருக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து தீர்மானிக்க வேண்டும் என மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment