குருநாகல்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட ஆளுனர் - sonakar.com

Post Top Ad

Tuesday 3 December 2019

குருநாகல்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட ஆளுனர்



குருநாகல், வில்கொட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை இன்று (3) ஆளுனர் முசம்மில் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல உதவி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக முசம்மில் வாக்குறுதியளித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளிடம் அவர் வேண்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-இக்பால் அலி

No comments:

Post a Comment