வெள்ளை வேன்: ராஜிதவின் முழு வீடியோவையும் கோரும் நீதிமன்றம் - sonakar.com

Post Top Ad

Friday, 6 December 2019

வெள்ளை வேன்: ராஜிதவின் முழு வீடியோவையும் கோரும் நீதிமன்றம்

UffJ13u

மஹிந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளை வேன் கடத்தல் எவ்வாறு நடந்தது என்பது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜித சேனாரத்ன நடாத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பின் முழு வீடியோவை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் இது பற்றி விளக்கமளித்திருந்ததோடு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவின் உத்தரவிலேயே அவை நடைபெற்றதாக தெரிவிததிருந்தார்.

தற்போது, ஆட்சியதிகாரம் மாறியுள்ள நிலையில் ராஜித நடாத்திய செய்தியாளர் சந்திப்பு பற்றி விசாரணை நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment