வடமேல் மாகாண விருது விழா - sonakar.com

Post Top Ad

Monday 23 December 2019

வடமேல் மாகாண விருது விழா


வடமேல் மாகாண சபைக்குட்பட்ட  நிறுவனங்களுக்குக்கிடையில் நடைபெற்ற செயல்திறன் போட்டியின் பரிசளிப்பு மற்றும் விருது விழா இன்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, வடமேல் மாகாணத்தின் சிறந்த மாநகர சபையாக குருநாகல் மாநகர சபையும், வடமேல் மாகாணத்தின் சிறந்த நகரசபையாக குளியாபிட்டிய நகர சபையும், வடமேல் மாகாணத்தின் சிறந்த பிரதேச சபையாக வாரியப்பொல பிரதேச சபையும் விருதுகளைப் பெற்றுக்கொண்டது.

வடமேல் மாகாண சபை தலைவர் டிக்கிரி அதிகாரி, வடமேல் மாகாண செயலாளர் P.B.M. சிறிசேன, குருநாகல் மாவட்டச் செயலாளர் காமினி இளங்கரத்ன, அமைச்சக செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையர் இந்திகா இளங்ககோன், வடமேல் மாகாணசபையின் பிரதானிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்த விருது வழங்கும் விழாவில்  கலந்து சிறப்பித்தனர். 

-Iqbal Ali

No comments:

Post a Comment