ராஜித சொல்லியே அவ்வாறு செய்தோம்: கைதிகள் ஒப்புதல் - sonakar.com

Post Top Ad

Wednesday 18 December 2019

ராஜித சொல்லியே அவ்வாறு செய்தோம்: கைதிகள் ஒப்புதல்


வெள்ளை வேன் சாரதிகன் என ராஜித சேனாரத்னவால் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த இருவரும் தாம் ராஜிதவின் அறிவுறுத்தலுக்கமைவாகவே அவ்வாறு பேசியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.



கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கைதிகள் இவ்வாறு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கோட்டாபே ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் அவரது அறிவுறுத்தலுக்கமைவாக வெள்ளை வேன் கடத்தல்கள் இடம்பெற்றதாகவும் தாம் வெள்ளை வேன் சாரதிகள் எனவும் குறித்த நபர்கள் செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment