சுற்றுலா பயணிகள் முறைப்பாடு: பிரசன்ன தலையீடு - sonakar.com

Post Top Ad

Sunday, 29 December 2019

சுற்றுலா பயணிகள் முறைப்பாடு: பிரசன்ன தலையீடு


தம்புள்ள பகுதி ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக பெருந்தொகை பணத்தைச் செலுத்தி தங்கியிருந்த மூன்று நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக தம்புள்ள பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து குறித்த விவகாரத்தை விசாரிக்குமாறு தலையிட்டுள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.மழை பெய்ததன் பின்னணியில் சுகாதாரக் கேடான சூழ்நிலையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நெதர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் சட்டத்தரணிகள் இருவருமே இவ்வாறு கழிவறை மற்றும் கட்டிடத்தின் அலங்கோலத்தினால் அதிருப்தியுற்றுள்ளதோடு முன் கூட்டியே ஹோட்டலைக் கை விட விரும்புவதாகவும் தமது மிகுதிப் பணத்தைத் தருமாறும் கேட்டுள்ளனர்.

எனினும், ஹோட்டல் நிர்வாகம் மறுத்ததையடுத்து குறித்த சுற்றுலாப் பயணிகள் பொலிசில் முறையிட்டுள்ளதோடு நாடு திரும்பியுள்ள நிலையில் பிரசன்ன இவ்விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதுடன் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment