போதைப் பொருள் பேர்வழி "கலு துஷாரவுக்கு" மரண தண்டனை - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 December 2019

போதைப் பொருள் பேர்வழி "கலு துஷாரவுக்கு" மரண தண்டனைபிரபல போதைப் பொருள் கடத்தல் பேர்வழி கலு துஷாரவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.2017ம் ஆண்டு 25 கிராம் போதைப் பொருளுடன் கைதான ஹேரத் முதியான்சலாகே துஷார எனும் இயற்பெயர் கொண்ட, கலு துஷார என அறியப்படும் நபருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மரண தண்டனையை அமுல் படுத்துவதற்கு எதிரான தடை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment