பேராதெனிய பல்கலை முஸ்லிம் மஜ்லிஸ்: 75 ஆண்டுகள்! - sonakar.com

Post Top Ad

Sunday 8 December 2019

பேராதெனிய பல்கலை முஸ்லிம் மஜ்லிஸ்: 75 ஆண்டுகள்!


பேராதனை பல்கலைக்கழகமானது பன்மைத்துவமான  காலசார சூழலைலில் தத்தமது  மாணவர்களனது தனித்துவமான கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து இன நல்லிணக்கத்தையும்  சகவாழ்வையும் தொடர்ந்து  ஆரம்பம் முதல் இன்று வரையிலும் உறுதியுடன் பேணி வரும் பல்கலைக்கழகமாகும். பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் உருவாக்கப்பட்டு 75 வது வருடத்தை அடைந்து விட்டது.  முஸ்லிம் மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றுக்கும் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றுக்குமிடையே இரு வருடங்கள் தான் வித்தியாசங்கள் உள்ளன. இந்த முன்மாதரிமிக்க வரலாற்றை சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்  உருவாக்க இடமளிக்காமல் மேலுமம் தொடர்ந்து 75 வருடங்களுக்கு மேல் கல்வியலாளர்களாலேயே  தீர்க்கமான வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் பி திசாநாயக தெரிவித்தார்.


பேராதனை பல்கலைக்கழகத்தின் 75 வது அகவயில் கால் பதிக்கும் முஸ்லிம் மஜ்லிஸின் பவள விழா நிகழ்வும்  அல்- இன்சிராஹ்  நூல் வெளிவெளியீட்டு விழாவும் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் டி. கே. டி பெரேரா அரங்கில் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் எப். எம். அப்ரார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் பி திசாநாயக இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், பேராதனை பல்கலைக்கழகம் 1942 ஆம் ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் மஜ்லிஸ் 1944 ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த முஸ்லிம் மஜ்லிஸின் 75 வருட பயணத்திற்காக பலர் ஆர்ப்பணிப்புடன் பங்காற்றியுள்ளனர். ஆரம்ப கர்த்தாவாக அப்போதைய உபவேந்தர் சேர் ஐவர் ஜென்னிங்ஸ், பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகத்துறைப் பேராசிரியர் எ;. ஏ இமாம் எஸ். எல். எம். சாபி மரைக்கார் உள்ளிட்டவர்கள் மிக முக்கியமானவர்கள் அவர்.

எமது பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இரண்டும், பள்ளிவால், இந்துக் கோவில், பௌத்த விஹாரை ஆகிய வணக்கஸ்தலங்கள் உள்ளன. இந்த விடயம் இன நல்லிணக்கதை எடுத்துக் காட்டக் கூடியதாகும். இது பல்கலைக்ழகத்தின் கல்வியாளர்களினால் உருவாக்கப்பட்ட திட்டம். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில்  முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இருந்து என் மனதைக் கவர்ந்துள்ள விடயம் என்னவென்றால் முஸ்லிம்களிடம் நிறையக் கலாசாரப் புண்புகள் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது ஒன்றுதான் முஸ்லிம்கள் மரணம் எய்தினால் இடம்பெறும் இறுதிக் கிரியையாகும்.  முஸ்லிம் ஒருவர் மரணம் எய்தினால் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் 24 மணித்தியாலயத்துக்குள் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சமுகத்திலே சிக்கனம்,  வாழ்க்கையின் தத்துவம், ஒவ்வொரு மனிதர்கள் இறக்கப்படும் விடயத்தில் கூறப்படும் அம்சங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. மிகவும் எளியமையான முறையில் நேர காலத்தையும் கருத்திற் கொண்டு மரணத்தை அடக்கம் செய்கின்றனர்.  இது மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாகும். இது என்னைக் கவர்ந்த விசயம். நான் ஒரு உபவேந்தராக இந்தப் பல்லைக்கழகத்தில் எல்லா சமயத்தவர்களையும் அவதானித்த போது முஸ்லிம்களுடைய ஒரு நல்ல அம்சமாக மரணத்தை நல்லடக்கம் செய்வதைக் காண்கின்றேன்.

அதே போன்று முஸ்லிம் சமூகம் எல்லோருடனும் இணங்கிச் செல்லுகின்ற சமூகம் என்பதற்கு எடுத்துக் காட்டாக பல்கலைக்கழகம் தோற்றததுடன் இருவருடங்களில் முஸ்லிம் மஜ்லிஸ் ஒன்றை உருவாக்கி அதன் வாயிலாக பல்கலைக்கழகத்துக்கு ஆற்றியபங்களிப்பு அளப்பரியவை. இதன் மென்மேலும் தொடர நல்வாழ்துத்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா, பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி  எம். ஐ. எம். இசாக், அரபு இஸ்லாமிய நாகரிகத்துறைத் தலைவர் எம். எம். யஷீர், கலாநிதி எம். இஸட். எம் நபீழ் .கலாநிதி சலீம், கலாநிதி ஆதம்பாவா சர்ஜுன்,  விரிவுரையாளர் தமீம், பேராதனை பல்லைக்கழக பிரதான கலை பீடத்தின் நூலகர் மகேஸ்வரன், கலாநிதி சுதர்ஷன், அஷ்ஷெய்க்  முனீர் முளவ்பர், சமயப் பெரியார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமூகத்தின் ஒற்றுமையi மையப்படுத்தி பல்கலைக்கழக சிங்கள, தமிழ் மாணவர்களுடைய நாடகம் பாடல் விருதுவழங்கல் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.  

-இக்பால் அலி

No comments:

Post a Comment