இணைத் தலைமை: UNP சர்ச்சைக்கு மனோ ஆலோசனை - sonakar.com

Post Top Ad

Friday, 29 November 2019

இணைத் தலைமை: UNP சர்ச்சைக்கு மனோ ஆலோசனைஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவி வரும் அதிகார சர்ச்சைக்குத் தீர்வைக் காணும் நிமித்தம், கட்சிக்கு இணைத் தலைமையை உருவாக்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார் மனோ கணேசன்.கட்சித் தலைவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என சபாநாயகர் தெரிவித்துள்ள போதிலும், சஜித் ஆதரவு அணியினர் அப்பதவி சஜித்துக்கே தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையை விட்டு விலக வேண்டும் எனவும் குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் மனோ இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment