தேர்தலில் சாதாரண மக்கள் வெற்றியடையவில்லை: NPP - sonakar.com

Post Top Ad

Monday, 18 November 2019

தேர்தலில் சாதாரண மக்கள் வெற்றியடையவில்லை: NPPநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை அதிருப்தியளிப்பதாக தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி, தேர்தல் முடிவு சாதாரண மக்களுக்குக் கிடைத்த வெற்றியில்லையென தெரிவிக்கிறது.வடக்கிலும் - தெற்கிலும் உருவாக்கப்பட்ட அச்ச சூழ்நிலைகளின் பிரதிபலிப்பாகவே தேர்தல் முடிவு அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள தேசிய மக்கள் சக்தி, இனவாத அச்சமற்ற சூழலை நோக்கிய நகர்i அடிப்படையாக வைத்தே தமது பிரச்சாரங்கள் அமைந்ததாகவும் தெரிவிக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment