நீதிமன்ற அவமதிப்பு: ஞானசாரவின் வழக்குக்கு தேதி குறிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 8 November 2019

நீதிமன்ற அவமதிப்பு: ஞானசாரவின் வழக்குக்கு தேதி குறிப்பு!

9crdcRX

2010ம் வருடம் முதல் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிட்டு, முஸ்லிம் விரோத செயற்பாடுகளை ஊக்குவித்து வந்த பொது பல சேனா பயங்கரவாதி ஞானசார, அண்மையில் நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்துக்குள் சட்டவிரோதமாக துறவியொருவரின் சடலத்தை எரித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.



இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பையும் மீறிய ஞானசாரவின் செயற்பாட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி இடம்பெறும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளுது.

ஞானசார உட்பட மூன்று பேர் பிரதான சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் ஏலவே நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்த ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது. 

No comments:

Post a Comment