ஐக்கிய இராச்சியம், லண்டன் நகரின் பிரபல லண்டன் பிரிட்ஜ் அருகே இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இதுவரை வெளியான தகவலின் படி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இது பயங்கரவாத தாக்குதல் என பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை சந்தேக நபர் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்த அதேவேளை போலி வெடி குண்டு அங்கியொன்றை அணிந்திருந்த நிலையில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நெதர்லாந்து ஹேக் நகரில் அஙகாடித் தெருவொன்றில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தின் பின்னணியில் 45-50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தேடப்படுவதாக அந்நாட்டு பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment