சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பௌத்த தகவல் மையம்.
அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஜினாநந்த தேரரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் ராஜிதவின் குற்றச்சாட்டுகளை அவரைக் கைது செய்த பின்னரே விசாரிக்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.
புதிய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது என தெரிவிக்கின்ற அதேவேளை, பல பௌத்த அமைப்புகள் நடைமுறை விவகாரங்களில் தலையிடுவது அதிகரித்து வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment