கோட்டா - ரணில் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday 19 November 2019

கோட்டா - ரணில் சந்திப்பு!



ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



அடுத்த பொதுத் தேர்தல் வரை காபந்து அரசொன்றை அமைப்பது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ள அதேவேளை நாளைய தினம் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரவையில் அங்கம் வகித்த சஜித் ஆதரவாளர்கள் பதவி விலகியுள்ள நிலையில் ஏனையோரும் பதவி விலகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment